நிதி அமைச்சு செய்தி வெளியீடு ( ? )
Posted on April 29th, 2015

Mahinda Gunasekera

Hon. Jason Kenney, MP
Minister of National Defence
and Multiculturalism

Dear Minister Kenney,

I do not know what you are trying to communicate to me in a language that I do not understand.

If  you are sending good wishes for the Sinhalese and Hindu New Year celebrated by most Sri Lankans
on the 14th of April, you are not only late but mistakenly communicating to me in Tamil, the language
spoken by a minority numbering less than 12 percent of the population of Sri Lanka.

I am a Canadian of Sri Lankan origin from the Sinhalese community.  I do not expect you to write to
me in Sinhala, but at least in one of the official languages of Canada, preferably in English, instead
of Tamil which I cannot read, speak or write.  Whatever you are trying to say in Tamil is not understood
by me, which some may even consider to be insulting as there are several Canadians of Sri Lankan Tamil
origin who are openly hostile towards the Sinhalese and are still seeking to carve out a separate mono-
ethnic racist state for Tamils out of the sovereign territory of Sri Lanka by whatever means including
every form of violence.

If your motive is to woo the Tamil speaking voters by sending out belated good wishes for the New Year,
you have once again failed to make an impact as it is two weeks too late.  As  Canada’s Minister of
Multiculturalism, it is indeed sad to note that you have ignored the Canadians belonging to the Sinhala
community who have celebrated the April 14th New Year for over two millennia, by selecting only
members of the Tamil community to receive your good wishes. 
Selective treatment of a section of
Canadians for special treatment by the Minister of Multiculturalism can only lead to damage the
multicultural fabric of Canadian society.

Yours sincerely,

Mahinda Gunasekera
On 4/28/2015 6:27 PM, jason.kenney@parl.gc.ca wrote:

நிதி அமைச்சு

செய்தி வெளியீடு

 

அமைச்சர் ஒலிவர் முன்வைக்கும் சமவரவுசெலவுத் திட்டமும்  

தொழில்வாய்ப்புகள், அபிவிருத்தி, பாதுகாப்புக்கான திட்டமும் 

 

2015ம் ஆண்டுக்கான பொருளாதார நடவடிக்கைத் திட்டம் தொழில்வாய்ப்புகளுக்கும் அபிவிருத்திக்கும் துணைநிற்கிறது; குடும்பங்களும் சமூகங்களும் வளம்பெற  உதவுகிறது; கனடியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துகிறது.

 

2015 ஏப்ரில் 21              ஒற்றாவா, ஒன்ராரியோ                நிதித் திணைக்களம்

நிதி அமைச்சர் ஜோ ஒலிவர் 2015ம் ஆண்டுக்கான பொருளாதார நடவடிக்கைத் திட்டத்தை  இன்று முன்வைத்தார். இது ஹார்ப்பர் அரசாங்கத்தின் சமவரவுசெலவுத் திட்டம்; தொழில்வாய்ப்புகள், அபிவிருத்தி, பாதுகாப்பு என்பவற்றுக்கான திட்டம். 2015ம் ஆண்டுக்கான பொருளாதார நடவடிக்கைத் திட்டம்:

 

  • 2015ல் வரவுசெலவுத் திட்டத்தை சமப்படுத்துவதாக ஹார்ப்பர் அரசாங்கம் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும். கடந்த அரை நூற்றாண்டுக் காலத்தில் என்றுமிலாவாறு கனடியர்கள் மத்திய அரசுக்குச் செலுத்தும் வரித்தொகையை மிகக்குறைந்த நிலையில் வைத்திருக்கும் அதேவேளை, சமவரவுசெலவுத் திட்டங்களுக்கு அரசாங்கம் மீளும்.
  • கனடாவை மேன்மேலும் சூழ்நிலைக்கு ஈடுகொடுக்கும் நாடாக்கி, தொழில்வாய்ப்பைத் தோற்றுவிக்கும் வணிக நிறுவனங்களைச் செழிக்க வைப்பதன் மூலமும்; வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முறையில் அடிப்படைக் கட்டமைப்புக்குத் துணைநிற்கும் அரசாங்கத்தின் பணியை விரிவுபடுத்தும் வண்ணம் புதிய, புதுமைவாய்ந்த முதலீடுகளை மேற்கொள்வதன் மூலமும்; தொழில்கொள்வோர் நாடும் தேவைகளை நிறைவேற்றும் வண்ணம் மிகவும் தேர்ச்சிவாய்ந்த தொழிலாளர்களைப் பயிற்றுவதன் மூலமும் தொழில்வாய்ப்புகளுக்கும் அபிவிருத்திக்கும் துணைநிற்கும்.
  • பாடுபட்டு உழைக்கும் குடும்பங்களுக்கும் தனியாட்களுக்கும் தொடர்ந்து வரிக்குறைப்பு மற்றும் பிற உதவிகளை வழங்கும் அதேவேளை அனைவருக்கும் வாய்ப்புகளைப் பெருக்குவதன் மூலம் குடும்பங்களும் சமூகங்களும் வளம்பெறத் துணைநிற்கும்.
  • கனடிய ஆயுதப் படைகளுக்குத் துணைநின்று, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் பயங்கரவாத ஆபத்திலிருந்து கனடியர்களைப் பாதுகாப்பதன் மூலம் கனடியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்.

 

வரவுசெலவுத் திட்டத்தை சமப்படுத்தல்:

  • பாரிய பொருளாதார பின்னடைவின் உச்சத்தில் $55.6 பில்லியனாக இருந்த பற்றாக்குறை தற்பொழுது குறைக்கப்பட்டுள்ளது; அத்துடன் 2015-16ல் $1.4 பில்லியன் மிகை ஏற்படும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
  • பாரிய பொருளாதார பின்னடைவுக்கு முந்திய $37 பில்லியன் படுகடனை ஹார்ப்பர் அரசாங்கம் செலுத்திக் குறைத்துள்ளது. 7 நாட்டுக் குழுமத்துள் (G-7) கனடிய அரசாங்கத்தின் மொத்த தேறிய படுகடன் சுமை ஆகக்குறைவாக இருப்பதற்கும், 20 நாட்டுக் குழுமத்துள் (G-20) அது ஆகக்குறைவானவற்றுள் ஒன்றாக இருப்பதற்கும் அதுவே முக்கிய காரணம்.
  • தொழில்வாய்ப்புகளைத் தோற்றுவிப்பதன் ஊடாகக் கனடியர்களின் கைகளில் அதிக பணத்தை மீதப்படுத்தும் ஹார்ப்பர் அரசாங்கத்தின் அரசிறை நிர்வாகக் கொள்கையை உள்ளடக்கிய சமவரவுசெலவுத் திட்ட சட்டவாக்கம் முன்வைக்கைப்படவுள்ளது.
  • கனடிய குடும்பங்களும் தனியாட்களும் இறுக்கும் வரிகளை ஹார்ப்பர் அரசாங்கம் மேலும் குறைப்பதற்கு சமவரவுசெலவுத் திட்டம் வழிவகுக்கிறது.

 

தொழில்வாய்ப்புகளுக்கும் அபிவிருத்திக்கும் துணைநிற்றல்:

  • 2019ம் ஆண்டுக்கு முன்னர் சிறுவணிக வரியை 9 சதவீதமாகக் குறைத்தல்—தற்போதைக்கும் 2019ம், 20ம் ஆண்டுகளுக்கும் இடைப்பட்ட காலத்தில் $2.7 பில்லியன் வரை மதிப்பிடப்பட்ட தொகையை தொழில்வாய்ப்பு தோற்றுவிக்கும் சிறுவணிக நிறுவனங்களுக்கும், அவற்றின் உடைமையாளர்களுக்கும் மீட்டளித்தல்.
  • பொறிவகைகள், உபகரணங்கள் என்பவற்றைப் பொறுத்தவரை உற்பத்திவளத்தைப் பெருக்கும் முதலீட்டை ஊக்குவிக்கும் பொருட்டு உற்பத்தியாளர்களுக்கு 10 ஆண்டுக்கான துரித மூலதனச் செலவு உதவிப்படி வழங்குதல்.
  • பண்ணை, கடற்றொழில் வணிக நிறுவனங்களுக்கான வாழ்நாள் மூலதன ஆதாய வரிவிலக்கை $1 மில்லியன் வரை அதிகரித்தல்.
  • கனடா சிறுவணிக நிதியீட்டுத் திட்டத்தின் ஊடாக கனடிய சிறுவணிக நிறுவனங்களுக்கு நிதிவசதியை மேம்படுத்தல்.
  • கனடா வணிக விருத்தி வங்கி ஊடாகவும், கனடா ஏற்றுமதி விருத்தி அமைப்பு ஊடாகவும் சிறிய, மத்திம வணிக நிறுவனங்களுக்கு உதவும்பொருட்டு அளிக்கப்படும் சேவைகளை விரிவுபடுத்தல்.
  • இளந் தொழில்முயற்சியாளர்களுக்குத் துணைநிற்கும் பொருட்டு இரண்டு ஆண்டுகளுக்கு கனடா இளந்தொழில்முயற்சி அமைப்புக்கு $14 மில்லியன் வழங்குதல்.
  • வணிக உடைமையாளர்களாக விளங்கும் பெண்கள் வெற்றியீட்ட உதவும்பொருட்டு தொழில்முயற்சியில் ஈடுபடும் பெண்களுக்கான நடவடிக்கைத் திட்டத்துக்குத் துணைநிற்றல்.
  • புதுமை படைக்கும் நிறுவனங்கள் விருத்தியடைந்து, தொழில்வாய்ப்புகளைத் தோற்றுவிப்பதற்கு ஏதுவாக தொழில்முயற்சி மூலதன நடவடிக்கைத் திட்டத்தின் ஊடாக உதவி புரிதல்.
  • மாகாணங்களும், ஆள்புலங்களும் குறிக்கப்பட்ட செம்முத்திரைத் தொழில்களில் பணிப்பயிற்சி, சான்றிதழீட்டு விதிமுறைகளை இயைபுபடுத்த ஏதுவாக அவற்றுக்கு உதவியளித்தல்.
  • அறிவியல் மற்றும் தொழினுட்பவியல் புத்துருவாக்கம் குறித்த அரசாங்கத்தின் புதுக்கிய திட்டத்தை முன்னகர்த்தும் பொருட்டு ஐந்து ஆண்டுகளுக்கு $1.5 பில்லியனுக்கு மேற்பட்ட நிதியை உலகத்திலேயே மிகச்சிறந்த  ஆராய்ச்சி, அபிவிருத்தியில் முதலீடு செய்தல்.
  • புதிய கனடா நிர்மாணத் திட்டத்துக்கமைய மாகாண, ஆள்புல, மாநகர அடிப்படைக் கட்டமைப்புக்கு தொடர்ந்தும் ஆண்டுதோறும் சராசரியாக $5.35 பில்லியன் வழங்குதல்.
  • மாநகரங்களில் ஊர்திப் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும், ஊர்திப் போக்குவரத்து முடங்காது பார்ப்பதற்கும் வேண்டிய புதிய அடிப்படைக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்குடன் கூடிய புதிய பொது பயண நிதியம் ஒன்றைக் குறித்து 2017–18ல் தொடங்கி ஈராண்டுகளுக்கு $750 மில்லியன், அதன் பிறகு ஆண்டுதோறும் $1 பில்லியன் முதலீடு செய்தல்.

 

குடும்பங்களும் சமூகங்களும் வளம்பெற உதவுதல்:

  • 2015ம் ஆண்டுக்கும் அடுத்த ஆண்டுகளுக்கும் செல்லுபடியாகும் வண்ணம் வரியற்ற வருடாந்த சேமிப்புக் கணக்கிற்கான உதவுதொகையை $10,000 வரை அதிகரித்தல்.
  • முதியோர் தமது ஓய்வுகால சேமிப்பை மேலும் மீதப்படுத்தி, தமது ஓய்வுகால வருமானத் தேவைகளை மேலும் சிறப்பாக நிறைவேற்ற வழிவகுக்கும் பொருட்டு பதிவுற்ற ஓய்வூதிய வருமான நிதியிலிருந்து மீட்கும் ஆகக்குறைந்த தொகைகளைக் குறைத்தல்.
  • முதியோரும் மாற்றுத்திறனாளிகளும் சுயாதீனமாக வாழும் வண்ணமும், தத்தம் வீடுகளில் தங்கியிருக்கும் வண்ணமும் அவர்களின் வீடுகளை மேலும் பத்திரமானவையாகவும், மேலும் மாற்றுத்திறவசதிகள் கொண்டவையாகவும் மாற்றுவதற்கு வேண்டிய திருத்தவேலைகளுக்கான செலவுகளை இறுப்பதற்கு உதவுமுகமாக வீட்டு மாற்றுத்திறவசதி வரிக்கழிவு புகுத்தல்.
  • குறுங்கால கல்வித் திட்ட மாணவர்கள் கனடா தாழ்ந்த-மத்திம வருமான மாணவர்க்கான மானியம் பெறும் தகுதியை விரிவாக்குவதன் ஊடாக இரண்டாம் நிலைக்கு மேற்பட்ட கல்வி பயிலும் வசதியைப் பெருக்குதல்.
  • தேவைகளைக் கணிக்கும் முறைமைக்கமைய பெற்றோரிடமிருந்து எதிர்பார்க்கப்படும் உதவுதொகையைக் குறைப்பதன் ஊடாக கனடா மாணவர் கடன் திட்டம் குடும்பங்களுக்கு உதவ வகைசெய்தல்.
  • சமூகநல வீட்டுவசதி வழங்குவோர் தமது புதுப்பிக்க முடியாத, நெடுந்தவணை அடைமானங்களைத் தண்டமின்றித் திருப்பிச் செலுத்த அனுமதிப்பதன் ஊடாக கனடாவில் சமூகநல வீட்டுவசதிக்கு உதவும் நோக்குடன் எங்கள் சமூகங்களில் மிகவும் நலிந்து வாழ்வோருக்கு 2016-17ல் தொடங்கி நான்கு ஆண்டுகளுக்கு $150 மில்லியன் வழங்குதல்.
  • பார்வை மட்டுப்பட்டவர்களுக்கு அச்சிட்ட பொருள்வகைகள் கிடைக்கும் வசதியை மேம்படுத்தல்.
  • கனடிய கடல்நாய் ஆக்கங்களுக்கு புதிய சந்தைவாய்ப்பு ஈட்டுவதற்கு உதவும்பொருட்டு ஐந்து ஆண்டுகளுக்கு $5.7 மில்லியன் வழங்குதல்.
  • மறவர்களும் அவர்களுடைய குடும்பங்களும் தமக்கு வேண்டிய உதவி பெறும் வண்ணம் மிதமான – கடுமையான வலுவீனத்துக்கு உள்ளாகிய மறவர்களுக்கு புதிய ஓய்வுகால வருமான உதவிப்படி வழங்குதல்; மாற்றுத்திற மறவர்களுக்கான நிரந்தர பாதிப்பு உதவிப்படி வசதியைப் பெருக்குதல்; மாற்றுத்திற பகுதிநேர சேமப்படை மறவர்களுக்கான ஊதிய இழப்பு உதவிப்படியை அதிகரித்தல்; பராமரிப்பவர்களின் நலன்கருதி புதிய வரியற்ற குடும்ப பராமரிப்பாளர் நிவாரண உதவிப்படியைத் தோற்றுவித்தல்; மறவர்களுக்கு தனித்தனி உதவி கிடைக்கும் வாய்ப்பை பெருக்குதல்.
  • பாரதூரமாக நோய்வாய்ப்பட்ட மற்றும் இறக்கும் தறுவாயிலுள்ள குடும்ப அங்கத்தவர்களைப் பராமரிக்கும் கனடியர்களுக்கு மேலும் துணைநிற்கும் வண்ணம் ஆறு கிழமைகளுக்கு வழங்கப்படும் தொழில்வாய்ப்புக் காப்புறுதிக் கருணைப் பராமரிப்பு உதவிப்படியை ஆறு மாதங்களுக்கு வழங்குதல்.

 

கனடியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தல்:

  • கனடிய ஆயுதப் படைகளுக்கு 10 ஆண்டுகளுக்கு ஏறத்தாழ $12 பில்லியன் வழங்கி தேசிய பாதுகாப்பு நிதியை அதிகரிப்பதன் ஊடாகக் கனடா தொடர்ந்தும் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் போரிடும் வல்லமையுடன் பணியாற்றத் தயாரான படையினரைத் களமிறக்கும் நாடாக விளங்குவதை உறுதிப்படுத்தல்.
  • ஈராக்-சிரியா இஸ்லாமிய அரசை (ISIS) எதிர்ப்பதற்கு கனடிய ஆயுதப் படைகளைக் களமிறக்க உதவும்பொருட்டு 2015–16ல் தேசிய பாதுகாப்புக்கு $360 மில்லியன் வழங்குதல்.
  • கனடிய தேசிய காவல்துறை (RCMP), கனடிய பாதுகாப்பு உளவுச் சேவை (CSIS), கனடா எல்லைச் சேவை முகமையகம் (CBSA) என்பவற்றுக்கு மேலதிக வளங்களை அளித்து பயங்கரவாதத்தை எதிர்த்து நிற்றல்.
  • வெளிநாட்டு உளவுத்தகவல் திரட்டும் கனடாவின் திறனைப் பெருக்குதல்.
  • எமது எல்லைகளின் திண்மையைப் பாதுகாத்தல்; தெரிவுசெய்யப்பட்ட நாடுகளிலிருந்து நுழைவனுமதியுடன் வரும் ஆபத்துக் குறைந்த பயணிகள் சட்டபூர்வமாக கனடாவுக்கு பயணம்செய்ய வழிவகுத்தல்.

 

துரித விவரங்கள்

  • ஹார்ப்பரின் அரசாங்கம் வரிகளைக் குறைத்து, உதவிப்படிகளைக் கூட்டியபடியால், உழைப்பவர்கள் இருவருடன் கூடிய நால்வரைக் கொண்ட வகைமாதிரியான கனடியக் குடும்பத்துக்கு 2015ல் வரிக்குறைப்பும், $6,600 வரை அதிகரித்த உதவிப்படிகளும் கிடைக்கும்.
  • இந்த அரசாங்கம் பதவியேற்றது முதல் ஆண்டுதோறும் வரிகளைக் குறைத்து வந்துள்ளது. மத்திய அரசு ஒட்டுமொத்தமாக மக்கள்மீது பொறுப்பித்துவந்த வரிப்பளு கடந்த 50 ஆண்டுகளுள் தற்பொழுது தான் மிகவும் தாழ்ந்துள்ளது என்பது உண்மையே.
  • 2009 யூன் மாதம் பொருளாதாரப் பின்னடைவின் இறுதியில் தொழில் புரிந்த கனடியர்களை விட 2 மில்லியனுக்கு மேற்பட்ட கனடியர்கள் தற்பொழுது தொழில் புரிகிறார்கள். மேற்படி தேறிய புதிய தொழில்களுள் பெரும்பாலானவை தனியார் கைத்தொழில் நிறுவனங்களில் அதிக சம்பளத்துடன் கூடிய முழுநேரப் பதவிகளாக இருந்துள்ளன.
  • 7 நாட்டுக் குழுமத்துள் (G-7) மிகச்சிறந்த பொருளாதார சாதனைகளுடன் மீட்சிபெற்ற நாடுகளுள் கனடா ஒன்று.
  • மெய்யான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) பொருளாதாரப் பின்னடைவைக்கு முந்திய மட்டங்களிலிருந்து கணிசமானளவு உயர்ந்துள்ளது—இது 7 நாட்டுக் குழுமத்துள் மிகச்சிறந்த சாதனை ஆகும்.
  • தொடர்ந்து ஏழாவது ஆண்டாக கனடாவின் வங்கி முறைமையே உலகில் மிகச்சிறந்த வங்கி முறைமை என்று உலக பொருளாதார அரங்கு அதன் உலகளாவிய ஈடுகொடுப்பு குறித்த ஆண்டறிக்கையில் கணித்துள்ளது.
  • 7 நாட்டுக் குழுமத்துள் (G-7) கனடாவிலேயே மொத்த வணிக வரிச்செலவுகள் மிகவும் குறைவு என்றும், அவை அமெரிக்காவில் உள்ளவற்றை விட 46 சதவீதம் குறைவானவை என்றும் கே.பி.எம்.ஜி. (KPMG) கூறுகிறது.
  • உலகிலேயே வணிகக் கவர்ச்சிமிகுந்த நாடுகளுள் இரண்டாவது நாடு கனடாவே என்று புளூம்பேர்க் (Bloomberg) கணித்துள்ளது.
  • நாணயநிலை கணிக்கும் அமைப்புகள்—Moody’s Investors Service, Fitch Ratings, Standard & Poor’s and DBRS—நான்கும் மீண்டும் கனடாவின் உச்ச நிலையை உறுதிப்படுத்தியுள்ளன. எதிர்வரும் ஆண்டிலும் கனடா அதன் உச்சநிலையை (AAA) பேணிக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

மேற்கோள்

2015ம் ஆண்டுக்கான மேற்படி பொருளாதார நடவடிக்கைத் திட்டம் தொழில்வாய்ப்புகளையும், அபிவிருத்தியையும், நெடுங்காலச் செழிப்பையும் தோற்றுவிக்கும். நாம் வாக்குறுதி அளித்தது போலவே இது ஒரு சம வரவுசெலவுத் திட்டம். பாடுபட்டு உழைக்கும் தனியாட்களுக்கும் குடும்பங்களுக்கும்   வரிக்குறைப்பு வழங்கும் திட்டம். மதிநலமும் நெறிதிறமும் வாய்ந்த திட்டம். கனடியர்கள் மேலும் வளம்பெற்று, மேலும் பத்திரமாக, உலகில் எமது நாடு எய்தியிருக்கும் இடத்தில் மேலும் நம்பிக்கையுடன் வாழ்வதற்கு ஏதுவான திட்டம். பிரதம மந்திரி ஸ்டீபன் ஹார்ப்பர் அவர்களின் வலிமைவாய்ந்த தலைமையில் கனடாவின் அரசிறை அகம் நன்னிலையில் இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் கனடியர்கள் ஆறித்தேறி அமர்ந்து கொள்ளலாம்.”

நிதி அமைச்சர் ஜோ ஒலிவர்

 

சேர்ந்த இணைப்பு

 

தொடர்பாளர்கள்:

மெலிசா லாண்ட்ஸ்மன்
தொடர்பாடல் பணிப்பாளர்
நிதி அமைச்சரின் அலுவலகம்
613-369-5696
ஸ்டீபனீ றூபெக்
ஊடக உறவு
நிதி அமைச்சு
613-369-4000

செய்தி வெளியீடுகள் அனைத்தையும் பற்றிய அறிவிப்பை மின்மடல் வாயிலாகப் பெறுவதற்குப் பின்வரும் இணையதளத்தில் பதிவுசெய்யவும்: www.fin.gc.ca/scripts/register-eng.asp.

 

 

As always, please share this message with friends and family.

 

Sincerely,

 

The Office of the Hon. Jason Kenney, PC, MP

Calgary Southeast

One Response to “நிதி அமைச்சு செய்தி வெளியீடு ( ? )”

  1. Jag Says:

    Joseph Kenny seems to have got re-baptised as a tamil, and his tamil (lady) secretary would’ve assisted him with this letter. The best way Joseph can show his honest desire to wish all Sri Lankans in tamil wouldn’t be complete unless he appears in parliament dressed in an ambudey with thala thel applied all over his body.

Leave a Reply

You must be logged in to post a comment.

 

 


Copyright © 2024 LankaWeb.com. All Rights Reserved. Powered by Wordpress