Pre –election Opinion polls and the media! தேர்தல் கருத்துக் கணிப்புக்களும், ஊடகங்களும்.
Posted on August 11th, 2015

By Ganapathy Moorty-கணபதி மூர்த்தி

There had been no pre-election opinion polls conducted until about 25 years ago.  The opinion polls were first introduced in the developed countries, and followed in the developing countries later on.  The problem here is now the opinion polls publications are used for election propaganda by the relevant parties involved in the election.  In fact some parties conduct such opinion polls through agencies, called NGO’s, in order to use the result in their favour.   The NGO’s also would comply as to the demand of the parties concerned, and would release the result of the so-called opinion polls a few days before the election day.  This would result in some self-serving politicians to change their allegiance to the party said to have the chance of winning the elections.    People, who have not decided as to whom they should be voting also would (mostly) decide to vote for the winning party.   Therefore, just be aware of the honesty of any politicians who change his or her allegiance just a before the elections. What we, the people, have to observe here is whether the organization (NGO) engaged itself in conduction the opinion poll has been favourable to certain party or the poll conducted and the result of the same released in a fair manner.  It is because we have to make sure, if the organizations also function, just like most of the media are there for only business and money making purpose, for money making or other sort of interests for them only.   Therefore people should be aware of such opinion polls and the media who engaged in such activities.  The best thing for the people to do is to speak among themselves, examining as to what kind of good things and the benefits delivered to, as well as bad things caused to the country and the people by certain leaders or parties .

There had been a time, that the media ( then it were only the print and radio) published (to some extent) the news without biases, even though there were some used for propaganda.  But nowadays, all these media are engaged in money /and other kind of profits making business, rather than publishing the truth.  Even the facebook, that was mainly created for sharing personal thoughts and events of interests,  have now become a medium of propaganda.

PLEASE BE AWARE OF SUCH THINGS!

தேர்தல் கருத்துக் கணிப்புக்களும், ஊடகங்களும்.

சுமார் 25 வருடத்திற்கு முன்பு வரை ஒரு தேர்தலுக்கு முன் கருத்துக் கணிப்பு என்பது இல்லாத ஒன்று.  கருத்துக் கணிப்பை வளர்ந்த நாடுகள்தாம் அறிமுகப் படுத்தி வைத்தன.   பின்னர் அவை வளர்முக நாடுகளாலும் பின்பற்றப் படுகின்றன.  பிரச்சினை என்னவெனில், இந்த கருத்துக் கணிப்புகள் பிரச்சாரத்திற்கான ஒரு கருவியாக பயன்படுத்தப்படும் நிலை தற்போது நிலவி வருவதுதான்.  இன்னும் சொல்லப் போனால், பிரச்சாரத்திற்காகவே கருத்துக் கணிப்பு அந்தந்த கட்சிகளினால் அவர்களின் ஏஜென்சிகளால் , NGO க்கள் என்ற போர்வையில் நடாத்தப்படுகிறது.   இந்த மேற்படி NGO க்களின் கணிப்புகளும் அவற்றை வழிநடத்தும் அரசியல்  கட்சிகளின் சார்பாகவே தமது கணிப்பை தேர்தலுக்கு ஒரு சில நாட்களுக்கு முன்னர்  வெளியிடும்.  இதைப்பார்த்து , சில, பல சுய நல அரசியல் வாதிகள் எந்தக் கட்சிக்கு ஆதரவு கூடியதாக சொல்லப் பட்டதோ அந்தக் கட்சிக்கு தாவி விடுவர்.   வாக்கு யாருக்கு  அளிப்பது என்ற தீர்மானமில்லாத மக்களும், சரி நாமும் வெல்லப்போகும் கட்சிக்கே வாக்களிப்போம் என்று (அனேகமாக) தீர்மானிப்பார்கள்.     ஆகவே, தேர்தலுக்கு சிலநாட்களுக்கு முன்னர் கட்சி தாவும் சுயநல அரசியல் வாதிகள் பற்றி கவனமாக இருக்கவும்.  எனவே, இதில் கருத்தில் கொள்ளவேண்டியது, கருத்து கணிப்பு வெளியிடும் அமைப்பு எது, அதனுடைய சார்பு வரலாறு என்ன, அது நியாயமான கணிப்பைத்தான் வெளியிடுகிறதா என அறிந்து செயல்படுவது நல்லது.  ஏனெனில், அனேகமான ஊடகங்கள் போலவே, வியாபாரதிற்காகவும், பணத்திற்காகவும் செய்திகளை வெளியிடும் இந்த அமைப்புகளையும் பார்க்கவேண்டும்.   இவற்றை விடவும் மக்கள் தமக்குள்ளே கலந்து  அரசியல் வாதிகளால் கிடைத்த அல்லது கிடைக்காமல் போன நன்மைகள், மற்றும் கெடுதிகள்  பற்றி பேசி முடிவெடுப்பது நல்லது.

ஒரு காலத்தில் ஊடகங்கள் (அவை பத்திரிகைகளும், வானொலியும் மட்டும்தான்)  உண்மையான ( கணிசமாக) தகவல்களையே தந்தன.  (ஆயினும் அப்போதும் பிரசாரத்திற்காகவே பத்திரிகைகள் வெளிவந்தன.   தற்போது முழுக்க முழுக்க வியாபாரம் என்ற நிலை வந்ததால் உண்மை நிலை ஊடகங்கள் மூலம் அறிவது முடியாதுள்ளது.  சொல்லப் போனால், facebook எனப்படும் முகப்புத்தகம், ஒவ்வொருவரும் தமது கருத்தினை, அல்லது நிகழ்வுகளை,  பகிரும் ஒரு சாதனமாக அறிமுகப் படுத்தப் பட்டது.  தற்போது, அதுகூட பிரச்சாரப் பலகையாக மாறிவிட்டது.

விழிப்புணர்வு தேவை!

One Response to “Pre –election Opinion polls and the media! தேர்தல் கருத்துக் கணிப்புக்களும், ஊடகங்களும்.”

  1. Kumari Says:

    Dear Ganapathy Moorti, I totally agree with you. Once I was watching how the Muslim terror organisations in the West get their funding. Apparently backing the extreme organizations plus backing those who oppose them are both being funded and advised by the same parent group. Thereby misleading the public to serve their own ulterior agendas. People in developing countries should be aware of these as the public opinion is manipulated by those who pull the strings. Best example is JVPs close working relationship with the UNP.

Leave a Reply

You must be logged in to post a comment.

 

 


Copyright © 2019 LankaWeb.com. All Rights Reserved. Powered by Wordpress