சீன – இலங்கைக்கான நடைமுறை திறன்மிக்க கூட்டுறவூ மீதான கலந்துரையாடலில் உயர்ஸ்தானிகர் செங் சியாவூன்ஸினது குறிப்புகளின் சுருக்கம்.
Posted on November 2nd, 2019

(முறைசாரா மொழிபெயர்ப்பு)( 29.10.2019இ தாமரை கோபுரம் கொழும்பு)

ஐஏ. சீன – இலங்கை பொருளாதார தொடர்புகள் பற்றிய சில உண்மைகள்

சீன – இலங்கைக்கான நடைமுறை திறன்மிக்க கூட்டுறவூ மீதான கலந்துரையாடலில் உயர்ஸ்தானிகர் செங் சியாவூன்ஸினது குறிப்புகளின் சுருக்கம்.
( 29.10.2019இ தாமரை கோபுரம் கொழும்பு)
ஐஏ. சீன – இலங்கை பொருளாதார தொடர்புகள் பற்றிய சில உண்மைகள்

  1. சீன அரசாங்கமானது இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்திக்காக அவசியமான மூலதனத்தை வழங்கியூள்ளது.
    சீனாவானதுஇ இலங்கைக்கான பாரிய முக்கியத்துவமான பங்குதாரரும் மிகப்பெரிய வெளிநாட்டு முதலீட்டாளருமாகும். உள்நாட்டு யூத்தத்திற்கு பின்னர் இலங்கை அரசாங்கமானது நாட்டை மீள் நிர்மாணிப்பதற்கும் பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்குமாக வெளிநாட்டு வளங்களை பெற்றுக்கொள்ள வேண்டிய ஒரு நிர்க்கதிமிக்க தேவையில் இருந்தது. சீனாவானது உண்மையான நண்பனாகவூம் அயலவனாகவூம் இலங்கைக்கு அதிகம் தேவைப்பட்ட நிதி உதவிகளை வழங்கியது. சீனாவிடம் இருந்து பெற்ற அனைத்து கடன்களும் விஞ்ஞான ரீதியான மதிப்பீட்டிற்கு பின்னரே வழங்கப்பட்டதுடன் இலங்கை அரசாங்கத்தினதும் தொழில் முயற்சிகளினது வேண்டுகோளின்படியூம் அமைந்தது.
    இலங்கை மத்திய வங்கி மற்றும் நிதியமைச்சின் வருடாந்த அறிக்கையின் படி 2018 ஆம் ஆண்டின் இறுதியில் மொத்த வெளிநாட்டு கடன் தொகையானது 52 பில்லியன் அமெரிக்க டொலராக அமைந்ததோடு அதில் 6 பில்லியன் சீனாவிடம் பெற்றதாகவூம் அது 11.5 சதவீதமாகவூம் அமைந்தது. இதில் மிக முக்கியமாக 6 பில்லியனில் 60 சதவீதமானது முன்னுரிமையான கடனாக அமைந்ததோடு வட்டிவீதமானது சந்தையின் சராசரி மட்டத்திற்கு மிக குறைவாக அமைந்திருந்தது. இதன்படி மீள் செலுத்துகையின் அழுத்தமானதுஇ உண்மையில் வெளிநாட்டு மேற்கத்திய நாடுகளின் சர்வதேச பன்னாட்டு முறிகளிடம் இருந்தே உருவாகியது. பல சந்தர்ப்பங்களில் இலங்கை அரசாங்கமானது சீனாவிடம் இருந்து பெறப்பட்ட குறைந்த வட்டிவீதத்தில் அமைந்திருந்த கடன்களில் இருந்தும் மேற்கத்திய நாடுகளிடம் இருந்து பெறப்பட்ட உயர் வட்டிவீதத்திலான கடன்களை மீள் செலுத்தியது. சீனாவானது கடன்பொறியை உருவாக்காது மாறாக அதிலிருந்து இலங்கையை மீட்டெடுப்பதற்கே உதவி செய்கிறது.
    சீனாவிடம் இருந்து பெறப்பட்ட கடன்களில் அதிகமான அளவில் துறைமுகங்கள்இ பாதைகள் மற்றும் நீர் பாதுகாப்பு செயற்திட்டங்களுக்கே உபயோகிக்கப்பட்டதுடன் இது மக்களின் வாழ்க்கை தரத்திற்காகவூம் இலங்கையின் சமூக பொருளாதார அபிவிருத்திற்கான நெருக்கடியை பூர்த்தி செய்வதாகவூம் அமைந்திருந்தது. சீனாவிடம் இருந்து பெறப்பட்ட கடன்களும் கூட்டுறவூ செயற்திட்டங்களும் அதிகளவில் உட்கட்டமைப்பு நிர்மாணத்தை சீர்திருத்தியதோடு பொருளாதார முன்னேற்றங்களை மேம்படுத்தியூம் வாழ்வாதாரத்தை முன்னேற்றியூம் இலங்கையினது எதிர்கால அபிவிருத்திக்கு அதிக சக்தியையூம் கொடுத்தது. பொதுவாக குறிப்பிடப்படும் கடன்பொறியானது மேற்கத்திய ஊடகங்களினால் புனையப்பட்ட ஒரு பொய்யான செய்தி என்பதை சொல்ல தேவையில்லை. அவர்களது ஒரே நோக்கமானது சீனாவினதும் ஏனைய அபிவிருத்தி நாடுகளினதும் பொதுவான அபிவிருத்தியை மட்டுப்படுத்துவதாகவே அமைந்திருக்கின்றது.
  2. சீன – இலங்கையினது நடைமுறை திறன்மிக்க கூட்டுறவின் தன்மையானது பரஸ்பரம் நன்மை பயக்ககூடியதும் வெற்றி வெளிப்பாடுகளையூம் கொண்டது.
    நுரைச்சோலை அனல்மின் நிலையத்தை ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்ளலாம். இது இலங்கைக்காக 50 சதவீத மின் இணைப்பு சட்டகத்தில் இருந்து மின்சாரத்தை தருவதோடுஇ மின்சார பற்றாக்குறை பிரச்சினையை தீர்ப்பதற்கு உதவூவதோடு ஒரு நிலையான மின்சார வழங்கலை உறுதிப்படுத்தி சராசரியாக மின்சாரத்தின் விலையை 20 சதவீதத்திற்கு குறைவடைய செய்கின்றது. இலங்கை மக்களும் நாடும் இந்த மின் நிலையத்தினால் பயன்பெறுகின்றார்கள்.
  3. சீன – இலங்கைக்கான நடைமுறை திறன்மிக்க கூட்டுறவானது அதிகளவிலான வேலைவாய்ப்பு சந்தர்ப்பங்களை கொண்டு வருவதே அல்லாது அதற்கு எதிரானதல்ல. எதிர்காலத்தில் இலங்கையின் மிக பிரதானமான தேவையான திறன்மிக்க இளைஞர்களை பயிற்றுவித்தல் செயற்பாட்டிற்கு இது உதவூகிறது.

முற்றுப்பெறாத புள்ளிவிபரங்களின் அடிப்படையில் இந்த இருதரப்பு கூட்டுறவானது ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட வேலைவாய்ப்புகளை உருவாக்கியதோடு 10இ000 தொழில்நுட்ப மற்றும் முகாமைத்துவ திறன்களை பயிற்றுவிக்க உதவியூள்ளதோடுஇ இலங்கையினது சுய அபிவிருத்திக்காக ஒரு திடமான மென்வலு அடித்தளம் இடப்பட்டுள்ளது.

சீன அரச நிர்மாண பொறியியல் துறைக்கான கூட்டுத்தாபனம் வரையறுக்கப்பட்டதானது நேரடியாக 30க்கும் மேற்பட்ட இலங்கை முகாமையாளர்களையூம் 2000 தொழிலாளர்களையூம் தொழிலுக்கு அமர்த்தியூள்ளது. ஹம்பாந்தோட்டையில் இக்கூட்டுத்தாபனமானது உள்@ர் மக்களுக்காக பாதுகாப்பு பயிற்சி மற்றும் தொழில் நிலையம் ஒன்றை ஸ்தாபித்துள்ளது. இந்நிலையமானது 2000 சதுர மீற்றர் பரப்பினை கொண்டதாகவூம் 12 பாதுகாப்பு பயிற்சி செயற்திட்டங்களையூம் 06 தொழில்சார் பயிற்சி நிகழ்ச்சி திட்டங்களையூம் கொண்டுள்ளதோடு பல உள்@ர்வாசிகள் பயிற்சிகளிலும் மதிப்பீடுகளிலும் சித்தி பெற்று தொழில்சார் பயிற்சி பத்திரங்களை பெறுவதற்கு வசதி செய்துள்ளது.

எதிர்வரும் ஆண்டுகளில் கொழும்பின் துறைமுக நகரத்தில் 83இ000 தொழில்வாய்ப்புகள் உருவாக்கப்படும்.

  1. சீன – இலங்கைக்கான நடைமுறை திறன்மிக்க கூட்டுறவானது உயர் தொழில்நுட்பத்தையூம்இ தரப்படுத்தலையூம்இ சூழல் பாதுகாப்பினையூம் மேற்கொள்வதற்கு முன்னுரிமை வழங்குகின்றது.
  2. சீன கம்பனிகளும் கூட்டு செயற்திட்டங்களும் சமூக பொறுப்புகளை செயற்படுத்துவதோடு நன்கொடைகளையூம் வழங்குகின்றது.
  3. சீன – இலங்கைக்கான நடைமுறை திறன்மிக்க கூட்டுறவானது இலங்கையின் இறைமைக்கும் பாதுகாப்புக்கும் ஒரு போதும் தீங்கு விளைவிக்காது. சில வெளிநாட்டு ஊடகங்கள் சீன துறைமுகங்கள்இ விமான தளங்கள் ஆகியவற்றை நிர்மாணித்து நடைமுறைப்படுத்துவதன் மூலமாக இராணுவத்தளம் ஒன்றை உருவாக்குவதற்கு திட்டமிடுவதாக குரலெழுப்புகின்றன. இது மூடத்தனமாக அல்லாது இருக்க முடியாது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனஇ பிரதம மந்திரி ரணில் விக்ரமசிங்கஇ சபாநாயகர் கரு ஜெயசூரியஇ முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஆகியோர் இந்த கூற்றுக்களை விமர்சித்துள்ளனர்.

வரலாற்றில் சீனாவானது ஏகாதிபத்தியம் மற்றும் குடியேற்றவாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட நாடாகும். சீனா தன்னுடைய இறைமையின் சுதந்திரத்தையூம் பிரதேச ஒருங்கிணைப்பையூம் மிக அதிகளவில் மதிப்பதோடு வெளிநாட்டு தலையீட்டினை எதிர்ப்பதோடு ஏனைய நாடுகளின் பிரதேசத்தையம் இறைமையையூம் ஒரு போதும் மீறுவது கிடையாது. சில வெளிநாட்டு சக்திகள் ஜனநாயகம் போன்ற பதாதையின் கீழ் தன்னிச்சையாக சீனாவில் இராணுவ மயப்படுத்தலை குற்றம் சாட்டி அவர்கள் அதையே இரகசியமாக செய்து வருகின்றனர். இலங்கை அரசாங்கமும் மக்களும் நியாயமான தீர்ப்பினை மேற்கொள்வார்கள் என நம்பப்படுகின்றது.

ஏ. சீன – இலங்கைக்கான நடைமுறை திறன்மிக்க கூட்டுறவின் அடுத்த படிகள் பற்றிய விதந்துரைகள்.

  1. நாங்கள் இணைந்து இலங்கையின் நிர்வாக மற்றும் சட்டவாக்க உறுப்புகளை மேம்படுத்த வேண்டும். சர்வதேச அனுபவம் குறித்த கொள்கைகளையூம் பொருத்தமான சட்ட ரீதியான சட்டகங்களையூம் ப+ர்த்தி செய்ய வேண்டும்.

வெளிநாட்டு முதலீடுகளை கவரக்கூடிய மிக சாதகமான சூழலை உருவாக்க வேண்டும். மிக சாதகமான பலனை தரக்கூடிய பாரிய செயற்திட்டங்களுக்கு உதவி செய்ய வேண்டும்.

  1. ஒப்பந்தங்களின் வர்த்தக நம்பகத்தன்மையையூம் சட்ட ரீதியான செல்லுபடி தன்மையையூம் நாங்கள் அதிகளவில் மதிக்க வேண்டும். நடைமுறைத்திறன் மிக்க ஒத்துழைப்பை உறுதி செய்யூம் செயற்திட்ட ஒத்துழைப்பை குறிப்பாக பாரிய செயற்திட்ட ஒத்துழைப்பை நிலையான கொள்கையை பேணுவதோடு அவை அரசாங்கத்தின் மாற்றங்களினால் பாதிக்கப்பட கூடாது.
  2. இரண்டு நாடுகளினதும் ஊடகம் மற்றும் கல்வி சார் நிலையங்கள் முழுமையாக தங்களுடைய சமூக பொறுப்புகளை வற்புறுத்துவதோடு மூன்றாம் தரப்பினரின் பொய் செய்திகளையூம் கட்டாயமான உத்தேசங்களை பிரதிப்பண்ணுவதை தவிர்ப்பதோடும் பொருத்தமான ஒத்துழைப்பு பற்றிய கள ஆய்வூ செய்வதோடு புறச் சார்புள்ள நியாயமான ஆய்வூகளை நிகழ்த்துவதோடு இரண்டு அரசாங்கங்களுக்கும் வர்த்தக சமூகத்திற்கும் நல்ல ஆலோசனைகளையூம் நல்ல விதப்புரைகளையூம் செய்ய வேண்டும். இதனை செய்வதன் மூலமாக மாத்திரமே பொது மக்கள் சீன- இலங்கைக்கான நடைமுறை திறன்மிக்க கூட்டுறவின் ஒத்துழைப்பு பற்றிய மிக சரியானதும் அறிவூப்பூர்வமானதுமான புரிதலையூம் பெற்றுக்கொள்ள முடியூம்.

Leave a Reply

You must be logged in to post a comment.

 

 


Copyright © 2024 LankaWeb.com. All Rights Reserved. Powered by Wordpress